மனிதாபிமானம் எங்கே? பெற்ற மகளை அந்தரத்தில் தொங்கவிட்டு அடித்த தந்தை..!!

மனிதாபிமானம் எங்கே? பெற்ற மகளை அந்தரத்தில் தொங்கவிட்டு அடித்த தந்தை..!!

Update: 2021-07-03 16:29 GMT

மத்தியப் பிரதேசத்தின் அலிராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள 19 வயது பழங்குடியின பெண்ணுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

புகுந்த வீட்டில் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்னை காரணமாக அங்கிருந்து வெளியேறினார். பிறந்த வீட்டிற்குச் சென்றால் திட்டுவார்கள் என்ற பயத்தில் உறவினர் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து இளம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவர, தந்தை மற்றும் சகோதரர்கள் அந்தப் பெண்ணை உறவினர் வீட்டிலிருந்து அழைத்து வந்துள்ளனர்.

அப்போது, ஊரின் நடுவே உள்ள மரத்தின் கிளையில் இளம்பெண்ணை அந்தரத்தில் தொங்கவிட்டு, தந்தையும் சகோதரனும் ஆளுக்கொரு பக்கம் நின்றுகொண்டு கட்டையால் அடித்து துன்புறுத்தியுள்ளனர். 



சுற்றி நின்று வேடிக்கை பார்த்த ஊராரில் சிலர் இதனை வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டனர். அந்த வீடியோவைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சிலர், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய கோரிக்கை விடுத்தனர். மக்களிடம்  மனிதாபிமானம் செத்துவிட்டது என்பதை இந்த சம்பவம்  காட்டுகிறது.

இதையடுத்து அலிராஜ்ப்பூர் மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில், சம்பந்தப்பட்ட குடும்பத்தினரை போலீசார் கைது செய்துள்ளார். நடந்த சம்பவத்தினால் அந்தப்பெண் மருத்துவமனையில் கடுமையாக பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார். 

Tags:    

Similar News