மாஸ்க் எங்கே? பிரதமருக்கே அபராதம் விதித்த அதிகாரிகள் !!

மாஸ்க் எங்கே? பிரதமருக்கே அபராதம் விதித்த அதிகாரிகள் !!

Update: 2021-04-26 19:06 GMT

கொரோனா தொற்று அதிகரிக்கும் சூழலில் மாஸ்க் அணியாமல் கூட்டத்திற்கு வந்த தாய்லாந்து பிரதமருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.  

உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் பல நாடுகள் தங்களின் இயல்பு நிலையை இழந்து வருகிறது. தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதால் அதனை மக்களுக்கு செலுத்தும் பணியில் அனைத்து நாடுகளும் தீவிரமாக இறங்கியுள்ளனர். அதேநேரத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மாஸ்க், கைக்கழுவுதன், தனிமனித இடைவெளி போன்ற கட்டுப்பாடுகள் அனைத்து நாடுகளிலும் தொடர்கிறது. பல நாடுகளில் இந்த நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டு தவறும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.


கொரோனவால் பாதிப்பு ஓரளவு கட்டுக்குள் இருக்கும் தாய்லாந்து நாட்டில் இதுவரை சுமார் 55,460 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு வாரங்களாக அங்கு தொற்று அதிகரித்து வருகிறது. 

இதனால் தாய்லாந்து அரசு பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், போன்ற பல்வேறு இடங்கள் மூடப்பட்டுள்ளன. முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதோருக்கு 20,000 பாட் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அங்கு நடந்த கொரோனா தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் அந்நாட்டு பிரதமர் பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா உள்பட உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாஸ்க் அணியாமல் தாய்லாந்து பிரதமர் ப்ரயுத் சான்-ஓச்சாவுக்கு கலந்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பிரதமருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் ப்ரயுத் சான்-ஒச்சாவுக்கு ரூ.14,273 அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.


 

newstm.in

Tags:    

Similar News