கொரோனா ஊரடங்கால் வீடுகளில் பறக்கும் வெள்ளை கொடி.. மக்கள் புதிய முயற்சி !

கொரோனா ஊரடங்கால் வீடுகளில் பறக்கும் வெள்ளை கொடி.. மக்கள் புதிய முயற்சி !

Update: 2021-07-09 08:42 GMT

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. 2ஆவது அலை ஓய்ந்தாலும் மூன்றாவது அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பல நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தாலும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

அந்தவகையில், மலேசியாவில் கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அங்கு வீடுகளில் வெள்ளை கொடி ஏற்றுவது மிகவும் அதிகரித்து வருகிறது. இந்த வெள்ளைக்கொடிக்கான காரணமும் சுவாரஸ்யம் கொண்டதாக உள்ளது. 

மலேசியாவில் தொடர் ஊரடங்கால் பலரும் பெரியளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்துள்ளனர். பலர் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இதனால் அத்தியவாசிய உணவு, பால் போன்ற விஷயங்களை வாங்க கூட அவர்களிடம் பணம் இல்லாத நிலை உருவாகியுள்ளது. இந்த மாதிரி உணவு தேவை உள்ள மக்கள் தங்களுடைய வீட்டிற்கு வெளியே வெள்ளை கொடியை ஏற்றுகின்றனர். இதை பார்க்கும் மற்ற நபர்கள் அவர்களுக்கு வந்து தேவையான உதவியை செய்து வருகின்றனர். 

இதற்காக மலேசியாவில் சாம்பல் என்ற அவசர உதவி செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி மூலம் வெள்ளை கொடி ஏற்றப்பட்ட இல்லங்களை அறிந்து உதவி அளிக்கப்பட்டு வருகிறது. 

அதேபோல் கொரோனா காலத்தில் உணவு இல்லாமல் தவிக்கும் விலங்குகள் உதவ சிவப்பு கொடி ஏற்றும் பழக்கமும் அங்கு தற்போது நடைமுறையில் உள்ளது. இந்த வழக்கத்தை அப்பகுதியில் உள்ள விலங்கு நல ஆர்வலர் தொண்டு நிறுவனம் ஒன்று தொடங்கி வைத்துள்ளனர்.
 

newstm.in

Tags:    

Similar News