அடுத்த முதல்வர் யார் ? இன்று வெளியாகும் தகவல்!

அடுத்த முதல்வர் யார் ? இன்று வெளியாகும் தகவல்!

Update: 2021-04-29 06:32 GMT

தமிழகம், கேரளம், புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களுக்கு ஏற்கெனவே வாக்குப் பதிவு நிறைவடைந்து விட்டது.  மேற்கு வங்கத்தில் இன்று  8ஆவது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
பொதுவாக வாக்குப் பதிவு நிறைவடைந்தவுடன் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாவது வழக்கம். ஆனால், மேற்கு வங்கம் மற்றும் அசாமில் பல கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுவதால், மற்ற மாநிலங்களில் வெளியாகும் கருத்துக் கணிப்புகள் அசாம் மற்றும் மேற்கு வங்க வாக்குப் பதிவில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே இதை கருத்தில் கொண்டு ஏப்ரல் 29 இரவு 7.30 மணி வரை வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்தது.
இதனால், தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளம் ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நிறைவடைந்தபோதிலும், வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகவில்லை.
இந்நிலையில் மேற்கு வங்கத்தின் இறுதிக் கட்ட வாக்குப் பதிவு இன்று நிறைவடைந்தவுடன் இரவு 7.30-க்குப் பிறகு தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களுக்குமான வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகவுள்ளன. இதனால் தமிழக தேர்தல் முடிவு மேலும் பரரப்பை கூட்டிஉள்ளது. 
Newstm.in 
Tags:    

Similar News