ஹீரோயினாக பதவி உயர்வு பெறும் ’செல்லம்மா’ பாடகி- யார் இவர்..?

ஹீரோயினாக பதவி உயர்வு பெறும் ’செல்லம்மா’ பாடகி- யார் இவர்..?

Update: 2021-02-27 21:29 GMT

டாக்டர் படத்தில் இடம்பெற்றுள்ள ‘செல்லம்மா’ பாடலை பாடிய சோனிடா காந்தி, அறிமுக இயக்குநர் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானவர் சோனிடா காந்தி. அந்த படத்தில் இவர் பாடிய படத்திற்கான அறிமுக பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து தமிழில் ஓ காதல் கண்மணி, 24, அச்சம் என்பது மடமையடா, காற்று வெளியிடை, வேலைக்காரன், இரும்புத்திரை, கோலமாவு கோகிலா ஆகிய படங்களில் பாடியுள்ளார்.

இந்நிலையில் டாக்டர் படத்தில் இவர் பாடிய ‘செல்லம்மா’ பாடலின் சிங்கில் டிராக் வெளியானது. அதில் இவர் பாடலை பாடுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றிருந்தது. இதன்மூலம் தமிழக ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு அவருக்கு கிடைத்தது. இவரை பார்க்கவே பலரும் பாடலை பார்த்தனர். செல்லம்மா பாடலும் அதிரிபுதிரி ஹிட்டடித்தது.

அதை தொடர்ந்து தற்போது அவருக்கு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்துள்ளது. விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் சோனிடா காந்தி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் கதாநாயகனாக சூரரைப் போற்று படத்தில் நடித்த கிருஷ்ணகுமார் நடிக்கிறார்.

இந்த படத்தை விநாயக் என்கிற அறிமுக இயக்குநர் இயக்குகிறார். இவர் விக்னேஷ் சிவனிடன் உதவி இயக்குநராக பணியாற்றியவர். ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த செய்தியை அறிமுக அறிவித்ததை அடுத்து, படக்குழுவினருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


 

Tags:    

Similar News