ATM மெஷினில் கிழிந்த நோட்டுகள் வந்தால் யாரை அணுக வேண்டும்? எவ்வாறு மாற்றுவது?
ATM மெஷினில் கிழிந்த நோட்டுகள் வந்தால் யாரை அணுக வேண்டும்? எவ்வாறு மாற்றுவது?
ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது பணம் வெளியே வராது, ஆனால் அக்கவுண்டில் அது கழிக்கப்பட்டிருக்கும். சில சமயங்களில் ஏடிஎம் மெஷின்களிலேயே செல்லாத நோட்டுகளும் வருகின்றன. இதுபோன்ற பிரச்சினைகள் ஏராளம். இதனால் வாடிக்கையாளர்கள் வங்கிக்கு சென்று ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவது ஆங்காங்கே நிகழ்கிறது.
ஏடிஎம் இயந்திரங்களில் பொதுவாக நல்ல நோட்டுகளே வைக்கப்படுகின்றன. ஆனால் சில சமயங்களில் கிழிந்த நோட்டுகள் வருவதாகவும் வாடிக்கையாளர்கள் புகாரளிக்கின்றனர். அவ்வாறு கிழிந்த நோட்டுகள் ஏடிஎம்மில் வந்தால் என்ன செய்வது என்று பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்காகவே ரிசர்வ் வங்கி திட்டம் வகுத்துள்ளது.
உங்களுக்கு அப்படி கிழிந்த அல்லது செல்லாத நோட்டுகள் ஏடிஎம்மில் வந்தால், எந்த ஏடிஎம்மில் எடுத்தீர்களோ அந்த வங்கிக்குச் சென்று புகார் அளிக்க வேண்டும். இதற்காக நீங்கள் ஒரு படிவத்தை நிரப்ப வேண்டியிருக்கும். அதில் நீங்கள் பணம் எடுக்கும்போது வந்த ரசீதையும் இணைக்க வேண்டும். ஒருவேளை ரசீது வராவிட்டால் பணம் எடுத்த நேரம், கணக்கு எண் ஏடிஎம் கிளை போன்ற விவரங்களை வழங்க வேண்டும்.
நீங்கள் இந்தப் புகாரைக் கொடுத்தவுடன் வங்கி தரப்பிலிருந்து பரிசோதனை செய்யப்பட்டு, நீங்கள் வழங்கிய விவரம் சரியாக இருந்தால் நீங்கள் எடுத்த கிழிந்த நோட்டை உங்களிடமிருந்து பெற்றுக்கொண்டு வேறு நல்ல நோட்டு உங்களுக்கு வழங்கப்படும்.