இப்படியே சென்றால் இந்தியாவில் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும்- WHO எச்சரிக்கை !
இப்படியே சென்றால் இந்தியாவில் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும்- WHO எச்சரிக்கை !
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் 2ஆம் வாரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதன் அச்சுறுத்தல் காரணமாக அன்றிலிருந்து 5 மாதங்களுக்கும் மேலாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதன் காரணமாக ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது கொரோனா வைரஸ் பரவல். எனினும் 2ஆவது அலை தற்போது, முதல் அலையை விட பல மடக்கும் அதிகம் பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளின் பலனாக கொரோனா சற்று கட்டுக்குள் வந்தாலும் நாளுக்கு நாள் பாதிப்பு புதிய உச்சத்தை நோக்கி தான் செல்கிறது. அதேபோல் உயிரிழப்பு புள்ளி விவரங்களும் அதிர்ச்சி அடையச் செய்கிறது.
எனினும் இந்தியாவில் வரும் காலம் மேலும் நிலைமை மோசமடையும் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன், இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவ பி1617 உருமாறிய வைரஸ் பாதி காரணம். மீதி காரணத்துக்கு பொதுமக்கள் முகக்கவசம் அணியாதது மற்றும் தனிமனித இடைவெளியை பின்பற்றாதது போன்றவை தான் என கூறினார்.
ஒருவேளை இந்த நிலை ஏற்பட்டால் அதனை தடுப்பூசிகளால் கூட தடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுவிடும். மாறாக அது ஒட்டுமொத்த உலகத்திற்கே பிரச்சனையாக மாறக்கூடும் எனவும் சௌமியா சுவாமிநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Newstm.in