த்ரிஷ்யம் 2 ரீமேக்கில் மோகன்லாலுக்கு பதிலா இவரா ?ரசிகர்கள் ஷாக் !!
த்ரிஷ்யம் 2 ரீமேக்கில் மோகன்லாலுக்கு பதிலா இவரா ?ரசிகர்கள் ஷாக் !!
மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற ‘த்ரிஷ்யம் 2’ திரைப்படம் பிற மொழிகளில் ரீமேக் செய்யப்படும் நிலையில், இதுதொடர்பான புதிய அப்டேட் தற்போது கிடைத்துள்ளது.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான படம் ‘த்ரிஷ்யம் 2’. நேரடியாக ஒ.டி.டி-யில் வெளியிடப்பட்ட இந்த படம் பல தரப்பினரிடையே பாராட்டுக்களை பெற்றது. முன்னதாக வெளியான முதல் பாகம் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி அடைந்தது. அதனால் அந்த படத்தின் இரண்டாவது பாகத்தையும் பிற மொழிகளில் ரீமேக் செய்வதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.
அதன்படி த்ரிஷ்யம் 2 படம் முதலாவதாக தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. தெலுங்கு பதிப்பையும் ஜீத்து ஜோசப்பே இயக்கவுள்ளதாக அறிவிக்கபப்ட்டுள்ளது. மேலும், தெலுங்கு த்ரிஷ்யம் படத்தின் முதல் பாகத்தில் நடித்த வெங்கடேஷ், மீனா, நதியா உள்ளிட்டோர் இரண்டாவது பாகத்திலும் நடிக்கவுள்ளனர். மலையாள த்ரிஷயம் 2-வில் கூடுதலாக ஒரு ஐஜி கதாபாத்திரம் புதியதாக இடம்பெற்றது. அதில் முரளிகோபி நடித்திருந்தார்.
தெலுங்கில் உருவாகும் த்ரிஷயம் 2 படத்தில், முரளிகோபி கதாபாத்திரத்தில் நடிக்க மோகன்லாலிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியது. இதுதொடர்பான தகவல்கள் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ராணா டகுபாத்தியை படக்குழு அணுகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் வெங்கடேஷின் அண்ணன் மகன் தான் ராணா. அதனால் அவர் இந்த படத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவிலேயே படக்குழு இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.