KFC உணவில் கோழியின் முழு தலை ! வாடிக்கையாளர் கோபம்.. நிர்வாகம் அளித்த சலுகை !!
KFC உணவில் கோழியின் முழு தலை ! வாடிக்கையாளர் கோபம்.. நிர்வாகம் அளித்த சலுகை !!
KFC வாடிக்கையாளரான பெண் ஒருவர் அடிக்கடி சிக்கன் வாங்கி சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். தென்கிழக்கு லண்டனின் Twickenham இல் அமைந்துள்ள KFC உணவு விடுதியில் ஆர்டர் செய்ததாகக் கூறப்படுகிறது. அவருக்கு டெலிவரி செய்யப்பட்ட உணவில் கோழியின் முழு தலை இருந்துள்ளது. இதனை கண்டு அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். புகைப்படத்துடன் அப்பெண் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளதில், எனது சூடான விங்ஸ் உணவில் கோழியின் வறுபட்ட தலை இருந்ததைக் கண்டேன். உடனே உணவை தூக்கி வீசிவிட்டேன் என கூறியுள்ளார்.
இதனிடையே, உண்மையான கோழிக்கறியை வழங்குவதாக கூறும் கே.எஃப்.சி, எங்கள் உணவகங்களில் அனைத்தையும் புதிதாகத் தயாரிக்கிறோம் என்று கே.எஃப்.சி நிர்வாகம் கூறுகிறது. சப்ளையர்கள், கூட்டாளர்கள் மற்றும் குழுக்களுடன் தாங்கள் வைத்திருக்கும் கடுமையான செயல்முறைகள் மற்றும் கண்காணிப்பில் சிறிய தவறு ஏற்பட்டிருப்பதை இது தெளிவாக காட்டுகிறது என்றும் கே.எஃப்.சி ஒப்புக்கொண்டது.
உணவு ஆர்டர் செய்த பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும், தங்கள் ரெஸ்டாரண்டுக்கு வந்து சமையலறைக் குழுவினரை சந்திக்கும்படி அழைப்பு விடுத்திருப்பதாகவும், மீண்டும் தங்களிடம் ஆர்டர் செய்வார்கள் என்றும் கே.எஃப்.சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் குறித்து நெட்டிசன்கள் கொடுக்கும் எதிர்வினைகளும், பதில்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒருவேளை சாப்பிடுபவரை கோழி கடித்திருந்தால்.. என பலரும் கலவையான விமர்சனங்களை சமூக வலைதளங்களில் செய்து வருகின்றனர்.
yum yum @KFC_UKI pic.twitter.com/hnTm8urQ3x
— Takeaway Trauma (@takeawaytrauma) December 20, 2021
newstm.in