அமித்ஷாவை சந்தித்து ஏன்..? முன்னாள் முதல்வரின் ஊடக ஆலோசகர் விளக்கம்..!!
அமித்ஷாவை சந்தித்து ஏன்..? முன்னாள் முதல்வரின் ஊடக ஆலோசகர் விளக்கம்..!!
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஒன்றான பஞ்சாபில் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்கிற்கும், மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த நவ்ஜோத் சிங் சித்துவிற்கும் இடையே மோதல்போக்கு இருந்து வந்தது. இந்த மோதல் போக்கின் உச்சமாக தனது முதல்வர் பதவியையே அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். இதன் பின்னர், புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றுக் கொண்டார்.
முதல்வர் பதவியில் இருந்து விலகிய அமரிந்தர் சிங், பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை நேரில் சந்தித்தார். வேறு எந்த கட்சியிலும் இணையும் திட்டம் தனக்கு இல்லை என்று கூறி வந்த அமரிந்தர் சிங், அமித்ஷாவை இன்று சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு ஊகங்களுக்கு வழி ஏற்படுத்தியுள்ளது.
அமித்ஷாவை மரியாதை நிமித்தமாகவே அமரிந்தர் சிங் சந்தித்துப்பேசியிருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
இந்தநிலையில், இந்த சந்திப்பு குறித்து அமரிந்தர் சிங் ஊடக ஆலோசகர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“ஒன்றிய உள்துறை அமைச்சர் அமரிந்தர் சிங்கை அமித்ஷாவை டெல்லியில் சந்தித்தார். நீண்ட காலமாக நடைபெற்று வரும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார். வேளாண் சட்டங்களை ரத்து செய்து குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உறுதியளித்து பிரச்சினையை உடனடியாகத் தீர்க்குமாறு வலியுறுத்தினார்.” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.