உளவு பார்க்கப்பட்டவர்கள் யாரும் இதுவரை ஏன் எந்த புகாரும் அளிக்கவில்லை?
உளவு பார்க்கப்பட்டவர்கள் யாரும் இதுவரை ஏன் எந்த புகாரும் அளிக்கவில்லை?
இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனத்தின் ‘பெகாசஸ் ஸ்பைவேர்’ செயலியின் மூலம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்களின் செல்போன்கள் ஒட்டு கேட்ட விவகாரம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தக்கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், பெகசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் முதன் முதலாக விசாரணைக்கு வந்தது. அப்போது, பெகசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டவர்கள் யாரும் இதுவரை எந்த புகாரும் அளிக்காதது ஏன்..? பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையிலேயே வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பத்திரிக்கை செய்திகளின் தன்மையை ஆராய்ந்தே பிறகே விசாரணிக்குள் செல்ல முடியும், பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் சந்தேகம் இல்லை, பெகாசிஸ் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்றது. அதை தற்பொழுது ஏன் அவசர அவசரமாக விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினர்.
2019 முதல் உளவு பார்க்கப்பட்டாலும் அதுகுறித்த விவரம் தற்போது தான் வெளியாகி உள்ளது. அதனால் தான் இத்தனை நாட்களாக யாரும் புகார் எதுவும் தெரிவிக்காமல் இருந்தனர் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நமக்கு தெரியாமலேயே நம் வாழ்க்கையில் நடக்கும் விஷங்களை உளவு பார்க்கக்கூடியது பெகாசஸ். தொழில் நுட்பம் மூலம் தனிநபர் ரகசியத்தை உளவு பார்ப்பது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என கபில்சிபில் கூறினார்.
பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பான ரிட் மனுக்கள் தொடர்பாக அனைத்து மனுதாரர்களும் தங்கள் மனு நகலை ஒன்றிய அரசுக்கு வழங்குமாறு உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது. இந்த வழக்கு (ஆகஸ்ட் 10) செவ்வாய்க்கிழமை ஒத்திவைக்கப்பட்டது.