இவர் ஏன் இப்படி செய்கிறார் ! செல்ஃபி மோகத்தால் சர்வதேச அளவில் வாங்கி கட்டிக்கொண்ட இளம்பெண்- வைரல் வீடியோ !!

இவர் ஏன் இப்படி செய்கிறார் ! செல்ஃபி மோகத்தால் சர்வதேச அளவில் வாங்கி கட்டிக்கொண்ட இளம்பெண்- வைரல் வீடியோ !!

Update: 2022-01-18 21:02 GMT

ஐஸ் கட்டி நிறைந்த ஆற்றில் காரை நிறுத்தி அதன் மேல் ஏறி ஒரு பெண் செல்ஃபி எடுத்துக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நவீன மயமாகிவிட்ட இன்றைய காலக்கட்டத்தில் செல்ஃபியும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இளம் தலைமுறையினர் எங்கு சென்றாலும் அதனை பதிவு செய்யும் முறையாக இதனை கடைபிடித்து வருகின்றனர். ஆனால் செல்ஃபி எவ்வளவுபெரிய ஆபத்தானது என்பதை நிரூபிக்கும் வகையில் அவ்வப்போது நிகழ்வுகளும் நடந்தேரி வருகிறது. அந்த வகையில் தற்போது கனடாவில் இளம்பெண் ஒருவரின் செயலுக்கு உலகளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

கனடாவின் ஒட்டா பகுதியில் ரிடியூ என்னும் ஐஸ் கட்டி ஆற்றில் ஒரு பெண் தனது வாகனத்தின் மேலே ஏறி செல்ஃபி எடுக்க முற்பட்டார். அவர் மேலே ஏறியதால் வண்டியின் எடை அதிகமாகி மூழ்க ஆரம்பித்து விட்டது. அதாவது தொடர் பனிப்பொழிவால் ஐஸ் நிறைந்து காணப்பட்ட ஆற்றில் இளம்பெண் சென்ற கார் விபத்தில் சிக்கியது. இதனால் அவர் காரின் மீது ஏறினார்.

இந்த நிலையிலும் அப்பெண் வண்டி மேலிருந்து கீழே இறங்காமல் தொடர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டே இருந்தார். பின்னர் அவரது வாகனம் முழுவதுமாக மூடும் நிலையில், அருகில் இருந்த பாதுகாவலர்கள் சிறிய ரக ரப்பர் போர்டு மூலம் அந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர். இந்நிலையில் மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் அந்த பெண் செல்ஃபி எடுப்பதை விமர்சித்து வருகின்றனர்.
 


முன்னதாக வாகனம் மூழ்க ஆரம்பிக்கும்போதே அருகில் இருந்த மக்கள் அவரை எச்சரித்து உதவ முயன்றனர். ஆனால் அப்பெண் ஒத்துழக்காமல் தொடர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. இதன் அடிப்படையில் விசாரணை நடத்தும் கனடா போலீசார் அப்பெண்ணுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுபோன்று ஆபத்தான முறையில் நடந்துகொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  கூறியுள்ளனர்.


newstm.in

Tags:    

Similar News