மனைவி கர்ப்பம்... 9 நாட்கள் லீவு கேட்ட எம்.பி!

மனைவி கர்ப்பம்... 9 நாட்கள் லீவு கேட்ட எம்.பி!

Update: 2021-01-31 09:32 GMT

மனைவி கர்ப்பமாக இருப்பதால் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி ராம் மோகன் நாயுடு கிஞ்சரப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரிலிருந்து 9 நாட்கள் விடுப்பு கேட்டுள்ளார்.

பொறுப்புள்ள கணவனாகவும், தந்தையாகவும் இருக்க வேண்டும் என்பதால் மனைவியின் பிரசவத்திற்காக விடுப்பு வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிள்ளை பெறுவதில் இருவருக்கும் பங்கு இருக்கிறது என்பதால் இந்த விடுப்பை எடுத்துள்ளதாகவும், ஜனவரி 29 முதல் பிப்ரவரி 10 வரை விடுப்பு வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் விராட் கோலி தனக்கு குழந்தை பிறக்க இருந்ததை காரணம் காட்டி விடுமுறை எடுத்துக் கொண்டு ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா திரும்பினார். அதனை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர்.

இந்நிலையில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மனைவியின் பேறு காலத்திற்கு விடுப்பு கேட்டிருப்பதை  சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

newstm.in

Tags:    

Similar News