வேறு ஒருவருடன் மனைவி ஓட்டம்.. கண்டுபிடித்து தந்தால் ரூ.5000 பரிசு என உலகுக்கே அறிவித்த கணவர் !
வேறு ஒருவருடன் மனைவி ஓட்டம்.. கண்டுபிடித்து தந்தால் ரூ.5000 பரிசு என உலகுக்கே அறிவித்த கணவர் !
வேறு ஒருவருடன் ஓடிய என் மனைவியை கண்டுபிடித்து தந்தால் ரூ. 5000 பரிசு தருகிறேன் என ஒருவர் பேஸ்புக்கில் உருக்கமான வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
மேற்குவங்க மாநிலம் பிங்கலா என்ற பகுதியில் தம்பதி வசித்து வந்துள்ளனர். இவர்களுக்குக ஒரு குழந்தையும் உள்ளது. இவர் ஐதராபாத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், அவருடைய மனைவி கடந்த டிசம்பர் 9ஆம் தேதியன்று, குழந்தையை அழைத்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். பின்னர் தான் தெரியவந்தது அவர், தன்னுடன் தொடர்பில் இருந்த ஒருவருடன் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டார் என்பது.
பின்னர் சொந்த ஊருக்கு சென்ற கணவர், தனது மனைவியை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. காவல்துறையிலும் புகார் அளித்தார். எனினும் மனைவியும் குழந்தையும் எங்கு இருக்கிறார்கள் என கண்டுபிடிக்கமுடியவில்லை. இந்த நிலையில், இறுதியாக பேஸ்புக்கில் உதவியை நாடியிருக்கிறார். தனது பேஸ்புக் பக்கத்தில் மனைவி, குழந்தையை தேடி அலைகிறேன், யாராவது கண்டுபிடித்து கொடுத்தால் 5,000 ரூபாய் பரிசு தருகிறேன் என பதிவிட்டுள்ளார். இவருடைய உருக்கமான பேஸ்புக் பதிவு வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் அப்பதிவில் அவர் கூறியிருப்பதாவது, நள்ளிரவில் வீட்டு ஜன்னலை உடைத்து அதன் வழியாக மனைவி, குழந்தையுடன் வேறு ஒரு நபருடன் தப்பிச் சென்றிருக்கிறார். அந்த நபர் என் மனைவிக்கு மொபைல் வாங்கி தந்திருக்கிறார். அந்த மொபைல் மூலம் இருவரும் நள்ளிரவு நேரங்களில் ரகசியமாக பேசி வந்துள்ளனர். அன்றைய தினம் நம்பர் பிளேட் இல்லாத டாடா நானோ கார் ஒன்று வீட்டின் அருகே வந்துள்ளது. அதில் தப்பியுள்ளனர்.
என் மனைவி வீட்டிலிருந்த நகை, பணம், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, குழந்தையின் பிறப்பு சான்றிதழ் போன்றவற்றை எடுத்துச் சென்றிருக்கிறார். என் மனைவி படிக்காதவர். அந்த நபர் அது வாங்கித் தருகிறேன், இது வாங்கித் தருகிறேன் என போலியாக அளித்த வாக்குறுதிகளை நம்பி அவருடன் சென்றிருக்கலாம். அவரை பாதியில் இறக்கி விட்டால் கூட வீட்டுக்கு வரத் தெரியாது.
என் வீட்டில் யாரும் மொபைல் பயன்படுத்துவது கிடையாது. அந்த நபர் வாங்கிக் கொடுத்த மொபைல் போன் தான் எல்லாத்துக்கும் காரணம். வீட்டில் உள்ள அனைவரும் என் மனைவி, குழந்தையின் வருகைக்காக காத்திருக்கிறோம். இதற்கு முன்னரும் கூட என் மனைவி வீட்டில் இருந்து சென்றிருக்கிறார். ஆனால் பழைய நிகழ்வுகளை பற்றி எனக்கு கவலையில்லை. நான் என் மனைவி, குழந்தைக்காக காத்திருக்கிறேன். நான் அவர்களுடன் வாழ வேண்டும், அவர்களை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 5000 ரூபாய் பரிசு தருகிறேன், என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
newstm.in