மனைவி காதலர் தினம் கொண்டாட்டம்.. கணவனுக்கு திருநங்கைகளுடன் தொடர்பு.. சிதைந்த குடும்பம்.. தவிக்கும் பிள்ளைகள்..
மனைவி காதலர் தினம் கொண்டாட்டம்.. கணவனுக்கு திருநங்கைகளுடன் தொடர்பு.. சிதைந்த குடும்பம்.. தவிக்கும் பிள்ளைகள்..
கடலூரைச் சேர்ந்த குமாரவேல் (27) மற்றும் ராஜேஸ்வரிக்கு(25) தம்பதியருக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்கள் வர்ஷினி (6), ராகுல் (4) ஆகிய 2 குழந்தைகளோடு கடலூர் மாவட்டம் பண்ருட்டி அன்வர்ஷா நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், காதலர் தினத்தன்று காலையில் கிளம்பிய ராஜேஸ்வரி இரவே வீடு திரும்பியுள்ளார். இதனால் அன்று இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த குமரவேல், மனைவி இரு குழந்தைகளோடு அசந்து தூங்கிக் கொண்டிருந்த போது இரும்பு கம்பியால் ராஜேஸ்வரியின் தலையில் தாக்கியுள்ளார். மேலும் ஆட்டுக்கல்லை எடுத்து மனைவியின் தலையில் போட்டுள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே ராஜேஸ்வரி தலை சிதைந்து உயிரிழந்தார்.
குமரவேல் வீட்டை பூட்டிக்கொண்டு தன் குழந்தைகளுடன் தலைமறைவானார். காலையில் ராஜேஸ்வரியின் வீட்டிலிருந்து ரத்தம் வெளியேறுவதை கண்டு பதற்றமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். அங்கு விரைந்த போலீசார் வீட்டிற்கு சென்றப்போது தலை நசுங்கி ராஜேஸ்வரி உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ந்தனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பினர். அதே சமயம் காடாம்புலியூரில் பதுங்கி இருந்த குமரவேலை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் குமரவேல் அளித்துள்ள வாக்குமூலம் மேலும் திடுக்கிட வைத்துள்ளது.
குமரவேல் தன் கார் ஓட்டுனர் பணியின் போது சில திருநங்கைகளுடன் தொடர்பு வைத்திருத்தாகவும், அது மனைவிக்கு தெரியவே மனைவி அவரை கண்டித்துள்ளார். இதனால் அடிக்கடி சண்டை உருவாகியுள்ளது. மேலும் ராஜேஸ்வரிக்கும் டிக்டாக்கில் வீடியோ போடுவது, சமூக வலைத்தளங்கள் மூலம் சிலரிடம் பழக்கம் வைத்தது குமரவேலுக்கு தெரியவரவே அவரும் தன் மனைவியை கண்டித்துள்ளார். இந்த நிலையில், தன் மனைவி பிப்ரவரி 14 காதலர் தினமான அன்று காலையில் வீட்டை விட்டு போய் இரவு வரவே ஆத்திரத்தில் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறுகின்றனர்.
newstm.in