நாளை முதல் இதெல்லாம் மாறுமா ?.. மீண்டும் விலை உயருமா என மக்கள் பீதி !!
நாளை முதல் இதெல்லாம் மாறுமா ?.. மீண்டும் விலை உயருமா என மக்கள் பீதி !!
செப்டம்பர் மாதம் முதல் மாறவிருக்கும் விதிமுறைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.
இதில் முதலாவதாக இடம்பெறுவது ஆதார்- பான் இணைப்பு. அதாவது, ஆதார் - பான் எண்ணை இணைக்க வேண்டுமென வருமான வரித்துறையும், வங்கிகளும் வலியுறுத்தி வருகின்றன. இதன்படி, இந்தியாவிலேயே மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் ஆதார் - பான் கார்டுகளை இணைக்க வேண்டுமென காலக்கெடு விதித்துள்ளது. ஏற்கனவே அவகாசம் அளித்து அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
பின்னர் மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றான சமையல் கேஸ் சிலிண்டர். கடந்த இரண்டு மாதங்களாக கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், செப்டம்பர் மாதமும் கேஸ் சிலிண்டர் விலை மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் கேஸ் சிலிண்டர் விலை வழக்கமாக மாற்றப்பட்டு வருகிறது.
பின்னர் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் PF கணக்குடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டுமென காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. அப்படி PF அக்கவுண்ட் - ஆதார் கார்டு இணைக்கப்படாவிட்டால், நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தால் உங்களின் PF அக்கவுண்டுக்கு பணம் செலுத்த முடியாது.
செப்டம்பர் மாதம் முதல், புதிய விதிகளின்படி GSTR-3B படிவத்தை தாக்கல் செய்யாதவர்களால் GSTR-1 படிவத்தை தாக்கல் செய்ய முடியாது.