கொரோனா 3ஆவது அலை குழந்தைகளை அதிகம் தாக்குமா? பெற்றோர்கள் ஆறுதல் !!

கொரோனா 3ஆவது அலை குழந்தைகளை அதிகம் தாக்குமா? பெற்றோர்கள் ஆறுதல் !!

Update: 2021-06-18 07:35 GMT

இந்தியாவில கொரோனாவின் 2ஆவது அலை யாரும் எதிர்பார்க்கமுடியாத அளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டது. எனினும் தொடர் ஊரடங்கால் தற்போது கொரோனா 2ஆவது அலை தணிந்து வரும் நிலையில், 3ஆவது அலை விரைவில் தாக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்த அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் எயம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா மற்றும் டாக்டர்கள் அடங்கிய குழுவினர் குழந்தைகளிடம் செரோ ஆய்வை நடத்தியுள்ளனர். மாவட்ட அளவில் நடத்தப்படும் இந்த ஆய்வு 5 மாநிலங்களில் நடந்துள்ளது.2 முதல் 17 வயது வரையிலான 700 குழந்தைகள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் 3,809 பேர் என மொத்தம் 4,509 பேர் இந்த ஆய்வில் பங்கேற்றனர். 

இந்த சர்வேயில் முடிவுகள் வெளிவந்து மக்களுக்கு வியக்கவைக்கும் புதிய தகவலை அளித்துள்ளது. அதாவது குழந்தைகளின் செரோ பரவல் 55.7 சதவீதமாகவும், பெரியவர்களின் விகிதம் 63.5 சதவீதமாகவும் இருந்துள்ளது. அந்தவகையில் புள்ளி விவர ரீதியாக குறிப்பிடத்தக்க வேறுபாடு இல்லை என கண்டறியப்பட்டு உள்ளது.

இவ்வாறு குழந்தைகளின் செரோ விகிதம் அதிகமாக இருப்பதாலும், பெரியவர்களுடன் ஒப்பிடக்கூடிய அளவில் இருப்பதாலும் கொரோனாவின் 3ஆவது அலை குழந்தைகளை அளவுக்கு அதிகமாக பாதிக்காது என நிபுணர்கள் கூறியுள்ளனர்.

மேலும் இதுகுறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா கூறுகையில், கொரோனா 3ஆவது அலை, குழந்தைகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கோ, அதிகமான குழந்தைகளை தாக்கும் என்பதற்கோ ஆதாரம் இல்லை. முதல் இரண்டு அலைகளை எடுத்துக்கொண்டால், ஒரே மாதிரிதான் இருக்கின்றன.

குழந்தைகள் பாதுகாப்பாகவே உள்ளனர். அவர்களை தாக்கினால் கூட லேசானா தொற்றாகவே இருந்தது. வைரசில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், குழந்தைகளை அதிகமாக தாக்க வாய்ப்பில்லை என விளக்கம் அளித்தார்.

ஆனால் ஏற்கனவே மூன்றவாது அலையில் குழந்தைகள் பாதிக்கப்படுவர் என கூறியதால் தமிழக உள்ளிட்ட மாநிலங்கள் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Tags:    

Similar News