தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கபடுமா ? முதலமைச்சர் பதில்
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கபடுமா ? முதலமைச்சர் பதில்
தமிழக முதலமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார் , அப்போது பேசிய அவர் ;
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் 12 குழுக்கள் திறம்பட செயல்பட்டு வருகின்றன.
கொரோனா தாக்கத்தை பொறுத்து தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு எடுக்கப்படும்.
சென்னையில் பணியின் போது உயிரிழந்த காவல் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்.
உயிரிழந்த அருள்காந்தியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்.
10ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத வேண்டியது அவசியம். தேர்வு எப்போது என்பது பற்றி ஆலோசித்து முடிவெடுக்கக்கப்படும்.
10ம் வகுப்பு தேர்வு என்பது ஒருவர் அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கான முக்கியமான தேர்வாகும்.
தமிழகத்தில் கொரோனா 3 - ம் நிலைக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது.
கொரோனா பாதிப்பை மறைத்தால் இந்திய தண்டனை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
Newstm.in