திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம் ரத்து செய்யப்படுகிறதா?

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 24ஆம் தேதி இரவு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருந்தும் அவர் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Update: 2020-02-28 01:04 GMT

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட திமுக கட்சித் தலைவர்கள் அவரை  நேரில் சென்று பார்த்து வந்துள்ளனர். இந்த செய்தி திமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 1ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாட கட்சி நிர்வாகிகள் திட்டமிட்டிருந்த நிலையில், அன்பழகனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
newstm.in

Tags:    

Similar News