‘அடிச்சு பறக்கவிடுமா...’ : அடுத்த அவதாரம் எடுத்தார் லாஸ்லியா..!

‘அடிச்சு பறக்கவிடுமா...’ : அடுத்த அவதாரம் எடுத்தார் லாஸ்லியா..!

Update: 2021-07-05 21:05 GMT

இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியா, பிக்பாஸ் சீசன்-3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். அந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள். அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அவருக்கு பட வாய்ப்பும் குவிந்து வருகிறது.

அந்த வகையில், அவருடைய கைவசம் இப்போது ‘பிரெண்ட்ஷிப்’, ‘கூகுள் குட்டப்பன்’ போன்ற படங்கள் உள்ளன. இதில், ‘பிரெண்ட்ஷிப்’ படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகிறது. ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கி இருக்கும் இப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாக நடித்துள்ளார் லாஸ்லியா.

இந்நிலையில், இப்படத்தின் மூலம் நடிகை லாஸ்லியா, பாடகியாகவும் அறிமுகமாகி உள்ளார். ‘பிரெண்ட்ஷிப்’ படத்தில் இடம்பெறும் ‘அடிச்சு பறக்கவிடுமா’ என்கிற குத்துப் பாடலை தேவாவுடன் இணைந்து பாடியுள்ளார் லாஸ்லியா. இந்தப் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது

.

Tags:    

Similar News