நாளை முதல் ஊரடங்கு உத்தரவா? முதல்வர் முக்கிய ஆலோசனை!
நாளை முதல் ஊரடங்கு உத்தரவா? முதல்வர் முக்கிய ஆலோசனை!
கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நடத்துகிறார்.
தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 6 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. முதல் அலையின் போது தொற்று உச்சத்தில் இருந்த நாட்களிளேயே ஒரு நாள் பாதிப்பு 7 ஆயிரத்தை தாண்டவில்லை.
ஆனால் கடந்த 10 நாட்களாக அதிவேகமாக அதிகரித்த கொரோனா ஒரு நாள் பாதிப்பு இப்போது 5,900இல் வந்து நிற்கிறது. இதே நிலை நீடித்தால் கேரளா போன்று தினசரி எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.
எனவே நோய் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாதிப்பு அதிகம் உள்ள சென்னையில் குழு அமைப்பு அதிகாரிகள் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுஒரு புறம் இருக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நோய் பரவுவதை தடுப்பது குறித்து நாளை மூத்த அமைச்சர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். மாநில அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தளர்வுகள் அளித்துள்ளது.
இந்நிலையில் முதல்வர் பழனிசாமி கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கவுள்ளார்.
newstm.in