மனைவிகளை மாற்றி உல்லாசம்: சிக்கும் தமிழக பிரபலங்கள்.. வெளியான அதிர்ச்சி தகவல் !!
மனைவிகளை மாற்றி உல்லாசம்: சிக்கும் தமிழக பிரபலங்கள்.. வெளியான அதிர்ச்சி தகவல் !!
மனைவிகளை மாற்றி உல்லாசம் அனுபவிக்கும் வினோத திருவிழா, ஆலப்புழா, கோட்டயம் மற்றும் எர்ணாகுளத்தில் மட்டுமே செயல்பாடு இருந்து வந்ததாக கூறப்பட்ட நிலையில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் அங்கம் வகித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் அருகே சங்கனாச்சேரி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சமீபத்தில் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், தனது கணவர் மற்றவர்களுடன் உறவில் ஈடுபட வற்புறுத்துவதாக குறிப்பிட்டிருந்தார். இந்த புகார் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினருக்கு அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் கிடைத்தன.
அதாவது, கேரளாவில் மனைவிகளை ஒருவருக்கொருவர் கைமாற்றும் கும்பல் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் ரகசிய விசாரணை நடத்தினர். அதன்அடிப்படையில், கோட்டயம், கருகச்சால் என்ற இடத்தில் 6 பேரை கைது செய்தனர். அவர்கள் ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களிடம் நடத்திய தீவிர விசரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
இந்தக் கும்பல் மெசஞ்சர், டெலிகிராம் ஆகிய சமூக இணையதளங்கள் மூலம் உறுப்பினர்களை சேர்க்கின்றனர். இதற்காக ‘கப்பிள் மீட் அப் கேரளா’ என்ற பெயரில் ஒரு குரூப் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்தக் குரூப்பில் கேரளா முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தம்பதிகள் என்று 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த கும்பல் குறித்து மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது, இந்த குரூப்பில் உள்ளவர்கள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமான பிறகு, ஒரு குறிப்பிட்ட நாளில் யாராவது ஒருவது வீட்டில் குடும்ப நண்பர்களை போல சந்தித்து கொள்வார்கள். குறைந்தது 3 முறையாவது இதுபோன்ற சந்திப்புகள் நடைபெறும். ஒருவரையொருவர் சந்தித்து நன்றாக பழகிய பிறகு உறவு கொள்வதற்கு பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்வார்கள்.
அங்கு, ஒருவருக்கொருவர் மனைவிகளை மாற்றி கொண்டு உல்லாச உறவில் ஈடுபடுகின்றனர். அவர்கள் டெலிகிராம், மெசஞ்சர்களில் போலி ஐடிகளை பயன்படுத்துவதும் தெரியவந்துள்ளது. இதற்கு மனைவிமார்கள் சம்மதிக்காவிட்டாலும் வலுகட்டாயமாக உறவில் ஈடுபடுத்தியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பலரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த விசாரணையின் மூலம் பல ரகசியங்கள் வெளிவரும் என கோட்டையம் போலீசார் தெரிவித்துள்ளனர். மனைவிகளை மாற்றி உல்லாசத்தில் ஈடுபட்டு வரும் கும்பல் கேரளாவில் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே, முதல்கட்டமாக ஆலப்புழா, கோட்டயம் மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் மட்டுமே இந்த செயல்பாடு இருந்து வந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது தமிழகம், கோவா மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அங்கம் வகித்து வருவது தெரியவந்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களும், திரையுலக பிரபலங்களும் இந்தக் குழுவில் இணைந்திருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தக் குழுவில் இடம்பெற்றிருப்பவர்கள் யார்? அவர்கள் இக்குழுவில் இணைந்தது எப்படி? போன்ற தகவல்களை சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
குற்றம்சாட்டப்பட்ட நபரின் மனைவி ஒருவர் கூறியதாக வெளியாகியிருக்கும் தகவலின்படி, 2013ஆம் ஆண்டு அவருக்கும் அவரின் கணவருக்கும் திருமணம் நடந்துள்ளது. பின்னர் வேலைக்காக அவருடைய கணவர் அரபு நாடு ஒன்றுக்கு சென்றிருந்த நிலையில் 2018ஆம் ஆண்டு அவரின் கணவர் கேரளா திரும்பியிருக்கிறார். இங்கு வந்ததில் இருந்து அவர் தனது மனைவியை மிரட்டி, துன்புறுத்தி வேறு நபர்களுடன் உறவு கொள்ள வைத்ததாக அவர் வாக்குமூலம் தந்துள்ளார்.
கொரோனா காலத்தில் சமூக வலைத்தளஙக்ள் வாயிலாகவும், வீடியோ கால்கள் மூலமாகவும் தொடர்பில் இருந்து வந்துள்ளனர். மேலும் இவர்கள் ஓட்டல் அறைகளை ஒருபோதும் தேர்ந்தெடுக்காமல் தங்களின் வீடுகளுக்கே மனைவியுடன் வரச் சொல்லி தங்களின் மனைவிகளை மாற்றி உல்லாசம் அனுபவித்து வந்ததாக தெரியவந்துள்ளது.
newstm.in