பெண்ணுக்கு கொலை மிரட்டல் - பயங்கர ஆயுதங்களுடன் 14 பேர் கைது!

சேலத்தை சேர்ந்த வெங்டேஷ் என்பவர் ஆலம்துரையிடம் இருந்து கார் ஒன்றை ஒப்பந்த அடிப்படையில் பெற்று திருவாரூரை சேர்ந்த கோபி என்பவரிடம் வாடகைக்கு விட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு விபத்து ஒன்றில் கார் சேதம் அடைந்தது. சேதமடைந்த காருக்காக கோபி ஒரு லட்ச ரூபாயை வெங்கடேஷிடம் கொடுத்துள்ளார்.

Update: 2020-03-03 01:00 GMT

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கறிஞர் உள்பட 14 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து     இரண்டு கார்களும், பயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 


பெரம்பலூர் மாவட்டம் துரைமங்கலம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் வழக்கறிஞர் ஆலம்துரை. சேலத்தை சேர்ந்த வெங்டேஷ் என்பவர் ஆலம்துரையிடம் இருந்து கார் ஒன்றை ஒப்பந்த அடிப்படையில் பெற்று திருவாரூரை சேர்ந்த கோபி என்பவரிடம் வாடகைக்கு விட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு விபத்து ஒன்றில் கார் சேதம் அடைந்தது. சேதமடைந்த காருக்காக கோபி ஒரு லட்ச ரூபாயை வெங்கடேஷிடம் கொடுத்துள்ளார். ஆனால் அந்த பணத்தை வெங்கடேஷ், காரின் உரிமையாளர் ஆலம்துரையிடம் கொடுக்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில் வெங்கடேஷ் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றுவிட்டார். இதனால் ஆலம்துரை பணத்தை கேட்டு கோபிக்கு நெருக்கடி கொடுத்துள்ளார். 


இந்நிலையில், வழக்கறிஞர் ஆலம்துரை தனது நண்பர்களுடன் கோபியின் வீட்டிற்கு கூட்டமாக சென்று  அவரது பெற்றோர் மற்றும் மனைவியிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அக்கம் பக்கத்தினர் கூறியதை அடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதனையறிந்த ஆலம்துரை மற்றும் அவருடன் வந்த அடியாட்கள் அங்கிருந்து தப்பியோடினர். இதனையடுத்து கோபியின் தந்தை ஜெயராமன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.


இதனிடையே தப்பிச்சென்ற கும்பல் நீடாமங்கலத்தில் வேறு சிலருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை நீடாமங்கலம் காவல்துறையினர் பிடித்து விசாரித்ததில், ஏற்கனவே தகராறு செய்து தப்பிவந்த கூட்டம் என தெரியவந்தது. இதனையடுத்து வழக்கறிஞர் ஆலம்துரை உள்ளிட்ட 14 பேரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து இரண்டு கார்கள், பயங்கர ஆயுதங்ளை பறிமுதல் செய்தனர். பின்னர் 14 பேரையும் மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

newstm.in

Tags:    

Similar News