நாயின் பிறந்த நாளுக்கு ரூ.11 லட்சம் செலவழித்த பெண்!!
நாயின் பிறந்த நாளுக்கு ரூ.11 லட்சம் செலவழித்த பெண்!!
பெண் ஒருவர் தனது செல்ல நாயின் பிறந்தநாளுக்கு 11 லட்ச ரூபாய் செலவு செய்து அனைவரையும் வியப்படைய செய்துள்ளார்.
சீனாவின் சாங்க்ஷா பகுதியிலுள்ள சியான்ஜியாங் பகுதியில் ஒரு பெண் தனது செல்ல நாயின் 10ஆவது பிறந்தநாளை 11 லட்சம் செலவுசெய்து கொண்டாடி இருக்கிறார்.
520 ட்ரோன்களை வாடகைக்கு எடுத்து, ‘’ஹேப்பி பர்த்டே டௌ-டௌ’’ என்ற எழுத்துகள் மற்றும் நாயின் உருவப்படம் ஆகிய வடிவங்களில் ஆகாயத்தில் பறக்கவிட்டு கொண்டாடி இருக்கிறார்.
ஆனால் ஆற்றங்கரையில் பறப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதியில் இவர் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருந்ததால் அந்த மகிழ்ச்சி நீடிக்காமல் போலீசார் தடுத்துவிட்டனர்.
சீனாவில் ஆற்றங்கரைகளில் குறிப்பாக உயரமான அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் பறக்க தடை செய்யப்பட்டுள்ளது. பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து தகவலறிந்த உள்ளூர் போலீசார் உடனடியாக விழா இடத்திற்கு சென்று தடுத்து நிறுத்திவிட்டனர்.
ஒருவேளை ஆகாயத்தில் பறக்கும்போது ட்ரோன்களை பார்த்திருந்தால் கண்டிப்பாக சுட்டு வீழ்த்தியிருப்போம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். மாண்டரின் மொழியில் 520 என்ற எண்ணுக்கு ஐ லவ் யூ என்ற அர்த்தம் இருப்பதால் அந்த பெண் 520 ட்ரோன்களை பயன்படுத்தியதாகக் கூறியிருக்கிறார்.
newstm.in