பெண் மீது கார் மோதிய விவகாரம்.. இந்து முன்னணி - பாஜகவினர் மோதல்.. வெளியான சிசிடிவி காட்சிகள்!!

பெண் மீது கார் மோதிய விவகாரம்.. இந்து முன்னணி - பாஜகவினர் மோதல்.. வெளியான சிசிடிவி காட்சிகள்!!

Update: 2020-03-04 14:15 GMT

கோவை கவுண்டம்பாளையம் தீயணைப்பு துறை அலுவலகம் அருகே இரு சக்கர வாகனமும் காரும் மோதிக்கொண்டது. அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த பெண்ணுக்கும் காரில் வந்த நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த இந்து முன்னணியை சேர்ந்த கார்த்திக், ஜெரால்ட் மற்றும் அவர்களது நண்பர் ஹரீஷ் ஆகியோர் கார்
ஓட்டி  வந்த நபருக்கு டிரைவருக்கு ஆதரவாக பேசியதாக கூறப்படுகின்றது. அந்த பெண் தனது சகோதரர் செல்வா என்பவரிடம் தெரிவிக்கவே, அவர் பா.ஜ.கவில் உள்ள தனது நண்பர் அசோக் மற்றும் அவரது நண்பர்களிடம் தெரிவித்தார்.

இதனை அடுத்து, வாகனம் ஓட்டிவந்த இரு தரப்பினரும் சென்று விட்ட நிலையில், விபத்து நடத்த இடத்தின் அருகே கார்த்திக் மற்றும் அசோக் ஆகிய இரு தரப்பினரும் சந்தித்து பேசிக்கொண்டனர். இரு தரப்புக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் இரு தரப்பும் மோதிக்கொண்டனர். இதில் பா.ஜ.க வை சேர்ந்த அசோக் தரப்பினர் அரிவாளால் தாக்கியதில் இந்து முன்னணியை சேர்ந்த கார்த்திக், ஜெரால்ட் அவர்களின் நண்பர் ஹரீஷ் ஆகிய 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

3 பேரும் படுகாயம் அடைந்த நிலையில், பா.ஜ.க நிர்வாகி அசோக் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பிஒடினர்.இந்நிலையில் படுகாயம் அடைந்த 3 பேரையும் காவல் துறையினர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனையடுத்து இந்து முன்னணி நிர்வாகிகளை அரிவாளால் தாக்கியதாக பா.ஜ.க இளைஞர் அணி நிர்வாகி அசோக் அவரது கூட்டாளிகள் ராசு, சண்முக சுந்தரம் , சச்சு உட்பட 6 பேர் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் உட்பட 5 பிரிவுகளில் துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரு தரப்பிற்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்த நிலையில் இந்த மோதல் சம்பவம் நடைபெற்று இருப்பதாகவும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்து முன்னணியைச் சேர்ந்தவர், பாஜக பிரமுகர் வீட்டில் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Tags:    

Similar News