பெண்களுக்கு அனுமதியில்லை... வேலையை காட்டிய தலிபான்கள் !

பெண்களுக்கு அனுமதியில்லை... வேலையை காட்டிய தலிபான்கள் !

Update: 2021-08-20 17:50 GMT

ஊடகங்களில் பணி செய்த அனைத்து பெண்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் உலக நாடுகளை அதிரவைத்துள்ளது. 
 
ஆப்கானிஸ்தான் தற்போது முழுவதுமாக தலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. அதற்கு முன்னதாக பெண்கள் பள்ளிக்கு சென்று படிக்கலாம்,  வேலைக்கு செல்லலலாம், விளையாடலாம் என அனுமதி அளிக்கப்பட்டு நடைமுறையில் இருந்தது. ஆனால் தலிபான்கள் பெண்களை எந்த செயலுக்கு அனுமதிக்கமாட்டார்கள். வீட்டைவிட்டு வெளியே வந்தாலே கணவருடன் தான் வரவேண்டும். இல்லையெனில் கடும் தண்டனை அளிக்கப்படும். 

இதனால் தான் ஆப்கனில் உள்ள பெண்கள் குறித்த கவலை உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது. தற்போது தலிபான்கள் கூறி வந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி அரசு ஊடகங்களில் வேலை செய்த பெண்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது

 ஆப்கானிஸ்தான் அரசு ஊடகங்களில் பணிபுரிந்த செய்தி வாசிப்பாளர்கள், செய்தியாளர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்ட செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு பதிலாக தலிபான்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட பெண் ஒருவர் கூறும்போது, நான் என் அடையாள அட்டையை காட்டிய பிறகும் என்னை அலுவலத்திற்கு அனுமதிக்க மறுத்து விட்டார்கள். இனி பெண்கள் செய்தி வாசிப்பாளர்கள் ஆக பணிபுரிய முடியாது என்று கூறி எங்களை வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள் என்று கண்ணீருடன் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


newstm.in

Tags:    

Similar News