பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது.. இசைக்கு தடை.. தலிபான்கள் அடாவடி தொடங்கியது !!

பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது.. இசைக்கு தடை.. தலிபான்கள் அடாவடி தொடங்கியது !!

Update: 2021-08-27 08:37 GMT

உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ளது ஆப்கானிஸ்தான். ஆப்கானிஸ்தான் தற்போது மீண்டும் தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்ததே இதற்கு காரணம். கடந்த 1996 முதல் 2001 ஆம் ஆண்டுவரை தலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்தபோது 10 வயதுக்கு மேல் பெண் குழந்தைகள் படிக்க கூடாது, பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது, இசைக்கு தடை என்கிற பழமைவாத ஷரியத் சட்டம் அமலில் இருந்தது.

இதனால் ஆப்கானிஸ்தான் பெண்கள் பட்ட கொடுமைகளை எளிதாக கடந்துவிடமுடியாது. அதன்பின்னர் ஆட்சிய மாறியதால் பெண்கள் கல்வி, விளையாட்டு, இசை, வேலை என அனைத்திலும் முன்னுரிமை பெற்று வளர்ந்தனர். ஆனால் 20 ஆண்டுகள் கழித்து தற்போது தலிபான் ஆட்சியைப் பிடித்துள்ளது. தற்போதைய மீண்டும் இந்த சட்டம் அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி உலக ஊடகங்கள் மத்தியில் எழுந்தது.

இதுகுறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், பெண்களின் பாதுகாப்பு கருதி ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் வேலைக்குச் செல்ல தலிபான் அரசு தடை விதித்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதே சமயத்தில் பெண்களின் உரிமைகள் பறிக்கப்படாது என்று அவர் உறுதியளித்துள்ளார்.

 ஆப்கானிஸ்தானில் "இசைக்கு" தடை விதிக்கப்படும். பல நாட்கள் நீடிக்கும் பயணங்களில் பெண்கள் ஒரு ஆண் துணையுடன் பயணம் செய்வது கட்டாயமாக்கப்படுகிறது. பெண்கள் பள்ளி மற்றும் வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்படும்; ஆனால் இசாப்(Hijab) அணிவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

Tags:    

Similar News