அதிர்ச்சியில் உலக நாடுகள்.. மீண்டும் சீனாவில் பரவும் கொரோனா வைரஸ்!

அதிர்ச்சியில் உலக நாடுகள்.. மீண்டும் சீனாவில் பரவும் கொரோனா வைரஸ்!

Update: 2021-06-09 18:50 GMT

உலகிற்கே பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது கொரோனா வைரஸ். மருத்துவ உலகம் இதனை எதிர்த்து கடுமையாக போராடி வருகிறது. எனினும் கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்புகள், இழப்புகள் நாளுக்கு நாள் குறைந்தபாடில்லை. 

உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதன்பின்னர் கொரோனா வைரஸ் வேகமாக பரவி உலகம் முழுவதும் விரிந்தது. ஆனால் அதன்பின்னர் சீனா கடும் போராட்டத்திற்கு பிறகு கொரோனா வைரஸை கட்டுப்படுத்தியது. அதேபோன்று பல்வேறு நாடுகளும் கொரோனாவை கட்டுப்படுத்தின. தற்போது அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்க, சீனாவிலோ மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.

இந்த நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா தலைக்காட்டத் துவங்கியுள்ளது உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய நிலவரப்படி சீனாவில் புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 33 பேருக்கு தொற்று உறுதியானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தவிர 9 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அறிகுறி இல்லாத தொற்று பாதிப்புகளை உறுதி செய்யப்பட்ட பாதிப்பாக சீன சுகாதாரத்துறை அறிவிப்பதில்லை. தற்போதைய நிலவரப்படி குவாங்டாங் மாகாணத்தில் தொற்று பரவி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய பாதிப்புகளின் மூலம் சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 91,316 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கொரோனாவால் அங்கு இதுவரை 4,636  பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

\

அங்கு  2019ஆம் ஆண்டிலும் இதுபோன்று குறைந்த எண்ணிக்கையில் பரவிய கொரோனா பின்னர் பெரும் பிரச்னையாக உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

Tags:    

Similar News