உலகக்கோப்பை டி20: 4 பந்தில் 4 விக்கெட்.. மலிங்கா சாதனையை சாய்த்த அயர்லாந்து பவுலர் !

உலகக்கோப்பை டி20: 4 பந்தில் 4 விக்கெட்.. மலிங்கா சாதனையை சாய்த்த அயர்லாந்து பவுலர் !

Update: 2021-10-18 19:30 GMT

ஐசிசி டி20 உலகக்கோப்பையில் வழக்கமான உற்சாகத்துடன் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. தகுதிச்சுற்று 'ஏ' பிரிவில் இன்று அயர்லாந்தும், நெதர்லாந்தும் மோதின. இப்போட்டியில் முதலில் அயர்லாந்து பந்துவீசியது. சிறப்பாக பந்துவீசிய அயர்லாந்து வீரர்கள் ரன்குவிப்பை கட்டுப்படுத்தி அடுத்தடுத்து விக்கெட்களை சாய்த்தனர். 

இதில் அயர்லாந்து வீச்சாளர் கர்டிஸ் கேம்ஃபர் ஹாட்ரிக் சாதனையோடு 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசாத்திய சாதனை புரிந்தார். அயர்லாந்துக்காக டி20 சர்வதேச கிரிக்கெட்டில் முதல் ஹாட்ரிக் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார். ஆடவர் டி20 சர்வதேசப் போட்டிகளில் ரஷீத் கான் அயர்லாந்துக்கு எதிராக 2019ஆம் ஆண்டு 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளார். அதே ஆண்டில் லசித் மலிங்கா நியூசிலாந்துக்கு எதிராக 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இப்போது கர்டிஸ் கேம்ஃபர் 4 விக்கெட்டுகளை வரிசையாகக் கைப்பற்றி சாதனை புரிந்துள்ளார்.

ஆட்டத்தின் 10வது ஓவரை வீச வந்த கேம்ஃபர் நெதர்லாந்தின் ஆக்கர்மேன் என்பவரை 11 ரன்களில் கேட்சில் வீழ்த்தினார். அடுத்த பந்தில் ரியான் டஸ்சதேவை எல்.பி.செய்தார். அடுத்த பந்தே எட்வர்ட்ஸ் என்பவரையும் எல்.பி.யில் வெளியேற்றினார் கர்டிஸ் கேம்பர். இது ஹாட்ரிக் சாதனையாகக் கொண்டாடப்பட்ட வேளையில் அடுத்து இறங்கிய வான் டெர் மெர்வ் வெளியே சென்ற பந்தை பெரிய டிரைவ் ஆடப்போய் மட்டையில் வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டு பவுல்டு ஆனார்.

ஆகவே 4 பந்துகளில் 4 விக்கெட்டுகள். அசாத்திய சாதனையை டி20 உலகக்கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் சாதித்தார் கர்டிஸ் கேம்பர். இப்போட்டியில் அயர்லாந்து அபார வெற்றிபெற்றது. முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 106 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணி 15.1 ஓவரில் 107 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. 

 
newstm.in

Tags:    

Similar News