கொரோனாவை வீழ்த்த மற்றொரு தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் !

கொரோனாவை வீழ்த்த மற்றொரு தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் !

Update: 2021-12-18 11:15 GMT

கோவோவேக்ஸ் கொரோனா தடுப்பூசியின் அவசரகாலப் பயன்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அமெரிக்காவைச் சோ்ந்த நோவாவேக்ஸ் நிறுவனம் கோவோவேக்ஸ் கொரோனா தடுப்பூசியைத் தயாரித்தது. அத்தடுப்பூசியை அதிக எண்ணிக்கையில் தயாரித்து, குறைந்த, நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு விநியோகிப்பதற்காக சீரம் நிறுவனத்துடன் நோவாவேக்ஸ் கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஒப்பந்தம் மேற்கொண்டது.

இதனையடுத்து, கோவோவேக்ஸ் தடுப்பூசியை சீரம் நிறுவனம் உற்பத்தி செய்வதற்கு இந்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் (டிசிஜிஐ) கடந்த மே மாதம் அனுமதி வழங்கியது. இந்நிலையில், கோவோவேக்ஸ் தடுப்பூசியின் அவசரகாலப் பயன்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பாவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், ஏழை நாடுகள் தடுப்பூசி செலுத்த முடியாத நிலை நீடித்து வருவதாக ஐ.நா சபை வருத்தம் தெரிவித்திருந்தது.   ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை அதிக எண்ணிக்கையில் விநியோகிக்க இந்த நடவடிக்கை வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது.

இது தொடா்பாக சீரம் நிறுவனத்தின் தலைவா் அதாா் பூனாவாலா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளோம். அதிக செயல்திறனையும் பாதுகாப்புத் திறனையும் கொண்டுள்ள கோவோவேக்ஸ் தடுப்பூசியின் அவசரகாலப் பயன்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளாா்.

 


newstm.in
 

Tags:    

Similar News