உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: மழையால் போட்டி ரத்து !!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: மழையால் போட்டி ரத்து !!

Update: 2021-06-18 20:17 GMT

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் நடத்தப்படும் முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மொத்தம் 9 அணிகள் பங்கேற்ற போட்டியில் ஒவ்வொரு அணிகளும் தலா 6 டெஸ்ட் தொடர்களில் விளையாட வேண்டும், கொரோனா அச்சத்தால் சில தொடர்கள் ரத்து செய்யப்பட்டு, புள்ளிகளின் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியாவும், நியூசிலாந்தும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையே நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் நகரில் நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்பதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது.

இந்த போட்டிகள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் கொரோனா கட்டுப்பாடு காரணமாக இங்கு 4 ஆயிரம் ரசிகர்கள் மட்டுமே நேரில் பார்க்க அனுமதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று சவுதாம்படனில் நடைபெற இருந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில் நாளை ஆட்டம் தொடரும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
 


 

Tags:    

Similar News