‘தங்கல்’ படத்தின் நிஜ நாயகி தற்கொலை! ரசிகர்கள் அதிர்ச்சி!!

‘தங்கல்’ படத்தின் நிஜ நாயகி தற்கொலை! ரசிகர்கள் அதிர்ச்சி!!

Update: 2021-03-18 18:02 GMT

மல்யுத்த போட்டிகளில் சர்வதேச அளவில் முன்னணியில் இருப்பவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த போகாட் சகோதரிகள். இவர்கள் இருவரும்  இந்தியாவுக்காக சர்வதேச அளவில் மல்யுத்த விளையாட்டில் பதக்கங்களை வென்றுள்ளனர். மல்யுத்த போட்டி தொடரின் இறுதி போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில் 17 வயதான இளம் மல்யுத்த வீராங்கனையான ரித்திகா போகாட் மரணமடைந்திருப்பது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், தூக்கு மாட்டிக்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டதாகவும்  உள்ளூர் பத்திரிகைகளும், அரியானா மாநில அரசும்  செய்தி வெளியிட்டுள்ளன.

ரித்திகா போகாட் மற்றும் கீதா மற்றும் பாபிதா போகட்டின் தாய் வழி சொந்தத்தில், இருவரும் சகோதரிகளாவர்கள். போட்டியில்  தோல்வி பெற்றதால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அரியானா மாநிலத்தின் சாக்ரி தாதிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  விளக்கம் அளித்துள்ளார்.  

ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்த ‘தங்கல்’  படத்தில் வரும் மல்யுத்த சகோதரிகளின் கதை இவர்களின் நிஜ வாழ்க்கையை தழுவி எடுக்கபட்ட திரைப்படம் தான்.

Tags:    

Similar News