யோகி பாபுவின் படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்!
யோகி பாபுவின் படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்!
தமிழ் திரையுலகில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு காலத்தில் சில படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியிடப்பட்டன. அந்த வகையில் சூர்யாவின் சூரரை போற்று , விஜய்சேதுபதி நடித்துள்ள க.பெ.ரணசிங்கம், ஜெயம் ரவியின் பூமி, ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள். கீர்த்தி சுரேசின் பெண்குயின், வரலட்சுமியின் டேனி உள்ளிட்ட படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.
அந்த வரிசையில் தற்போது யோகிபாபு கதாநாயகனாக நடித்துள்ள மண்டேலா படத்தையும் ஓ.டி.டி.யிலும், தொலைக்காட்சியிலும் வெளியிட முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தை மடோன் அஷ்வின் இயக்கி உள்ளார். இந்த படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்த்தின் முந்தைய ஏலே படமும் தியேட்டர் அதிபர்களுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பானது. விரைவில் ஓ.டி.டி.யிலும் வெளியிடப்படுகிறது.
மண்டேலா படத்தையும் அதே பாணியில் வெளியிட முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார் தயாரிப்பாளர். யோகிபாபு கதாநாயகனாக நடித்த காக்டெயில் படம் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.