தயிர், பால் பாக்கெட்டுகளுக்கு தடை!! மாற்றுவழியை யோசிக்கும் தமிழக அரசு!

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தது தமிழக அரசு. இந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் பாலை பாட்டில்களில் அடைத்து விற்கலாமா என்ற ஆலோசனையில் அரசு ஈடுபட்டுள்ளது.

Update: 2020-03-05 15:33 GMT

தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை அமலில் இருக்கும் நிலையில் பாக்கெட்டில் விற்கப்படும் உணவுப்பொருட்களுக்கு மாற்று வழியை அரசு ஆலோசித்து வருகிறது. 


கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தது தமிழக அரசு. இந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் வழக்கு தொடர்ந்தனர்.


பாக்கெட்டில் அடைத்து வைத்து விற்கப்படும் பொருள்களுக்கும் தடைவிதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் பிளாஸ்டிக் தடையை ஆவின் பாலில் இருந்து தொடங்குங்கள் என நீதிமன்றம் கூறியிருந்தது. இந்நிலையில் பாலை பாட்டில்களில் அடைத்து விற்கலாமா என்ற ஆலோசனையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

 
நீதிமன்ற உத்தரவின்படி ஆவின் பாலை பாக்கெட்டுகளில் விற்காமல் பழைய முறையில் கண்ணாடி பாட்டில்களில் விற்க அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மக்கள் நடமாடும் திரையரங்குகள் போன்ற பொது இடங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்க நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

newstm.in

Tags:    

Similar News