குற்றாலம் போகலாம்.. ஆனா, இது இருந்தால் மட்டுமே குளிக்க அனுமதி..!

குற்றாலம் போகலாம்.. ஆனா, இது இருந்தால் மட்டுமே குளிக்க அனுமதி..!

Update: 2021-12-20 11:28 GMT

குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றால அருவி ஐந்தருவி, புலியருவி, குண்டாறு அணை பகுதியில் உள்ள அருவிகள், மேக்கரை பகுதிகளில் உள்ள அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலம் ஐந்தருவி பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு கொரோனா தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குற்றால அருவிகளில் இன்று (20ம் தேதி) முதல் காலை 6 மணி முதல் மாலை 6 மணி சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

இதன்படி, பிரதான அருவியான குற்றாலம் மெயின் அருவியில் ஆண்கள் பகுதியில் ஒரே நேரத்தில் 10 பேர், பெண்கள் பகுதியில் ஒரே நேரத்தில் 6 பேர் அனுமதிக்கப்படுகின்றனர். ஐந்தருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தலா 10 பேர், பழைய குற்றாலம் அருவியில் ஆண்கள் பகுதியில் 5 பேர், பெண்கள் பகுதியில் 10 பேர் அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும், சுற்றுலாப் பயணிகள் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து நிற்பதற்காக வரையப்பட்டுள்ள வட்டங்களில் நின்று செல்ல வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News