இனி இந்த சான்றிதழ் இருந்தால் மட்டுமே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்ல முடியும்..!!

இனி இந்த சான்றிதழ் இருந்தால் மட்டுமே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்ல முடியும்..!!

Update: 2021-12-13 12:16 GMT

மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தி கொள்ளாத நபர்கள் நியாய விலை கடை, வியாபார நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட், திரையரங்கம், திருமண மண்டபம், கடைவீதிகள், துணிக்கடைகள், வங்கிகள், சந்தைகள், மதுபான கடைகள் உள்ளிட்ட பொது இடங்களில் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா நோய் 3ஆவது அலை தடுப்பு நடவடிக்கையாக மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இரண்டு தவணைகள் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நான்கு கோபுர வாசல்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழோ, குறுஞ்செய்தியோ, கோவின் இணையதளத்திலோ, வாட்ஸ்அப்பிலோ பதவிறக்கம் செய்யப்பட்ட சான்றிதழ் என ஏதாவது ஒரு ஆவணம் காண்பித்தால் மட்டுமே திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி இல்லாத 18 வயதிற்கு குறைவான சிறுவர்கள், குழந்தைகளை அனுமதிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

அதே போல் கள்ளழகர் திருக்கோயிலிலும் தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் , எனவும் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றுகளை காண்பிக்கும் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் வழிகாட்டுதல்படி, “கொரோனா தடுப்பூசி இரண்டு தவணைகள் ( டோஸ் ) செலுத்தியவர்கள் மட்டுமே இன்று 13.12.2021 -ஆம் தேதி முதல் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். 

திருக்கோயிலின் நான்கு கோபுர வாசல்களிலும் கீழ்கண்ட ஏதாவது ஒரு ஆவணம் சமர்ப்பித்தால் மட்டுமே கண்டிப்பாக திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது . 

1 ) கோவிட் தடுப்பூசி சான்றிதழ் நகல் வைத்திருப்பது . 
2 ) கைபேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட சான்றிதழ் . 
3 ) பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணில் குறுந்தகவல் வைத்திருப்பது 
4) Whatsapp செயலி மூலம் சான்றிதழ் பதிவிறக்கம் செய்தல் . 
5 ) கைபேசி எண் மூலமாக கோவின் இணையதளத்தில் உறுதி செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News