வாக்காளர் அடையாள அட்டை இல்லைன்னாலும் வோட்டு போடலாம்! இந்த 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை கைல வெச்சுக்கோங்க!

வாக்காளர் அடையாள அட்டை இல்லைன்னாலும் வோட்டு போடலாம்! இந்த 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை கைல வெச்சுக்கோங்க!

Update: 2021-03-12 16:00 GMT

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்றத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் வாக்களிக்க அடையாள அட்டை அவசியம். இது இல்லாதவர்கள் இன்னும் அப்ளை பண்ணாதவர்கள் எந்த வித இடர்ப்பாடும் இன்றி வாக்களிக்க தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.

அஞ்சு வருஷத்துக்கு ஒரு முறை தேர்தல் வருது, எங்கேயோ பத்திரமா இருக்கட்டுமேன்னு எடுத்து வெச்ச வாக்காளர் அடையாள அட்டையை சல்லடையா சலிச்சு தேடிப் பார்த்தாச்சு. இன்னும் கைக்கு வரலை. இனி புதுசா டூப்ளிக்கேட் அப்ளை பண்ணலாம்னு நெனைச்சா, தேர்தலுக்குள்ள அது கிடைக்குமான்னு தெரியலை என்று இன்று வரையிலும் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்குள் நுழையாத வாக்காளரா நீங்கள்?

கவலையேபடாதீங்க! இந்திய பிரஜைகள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில், வாக்களிப்பதை எத்தனை எளிதாக செயல்படுத்த முடியுமோ அந்தளவுக்கு வேலைகளில் இறங்கியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம். 

உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும், உங்கள் வாக்கை நீங்கள் செலுத்தலாம். வாக்காளர் பெயர் பட்டியலில் உங்களது பெயர் இருக்க வேண்டியது அவசியம். வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து  சான்றுக்காக காண்பிக்கப்பட வேண்டிய ஆவணங்களின் பட்டியல்
11ஆவணங்களை உபயோகப்படுத்தலாம் அவை புகைப்பட அடையாள அட்டை.
ஆதார் அட்டை
ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட பணி அட்டை
புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்குப் புத்தகங்கள்
மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை
ஓட்டுநர் உரிமம்


நிரந்தர கணக்கு எண் அட்டை
தேசிய மக்கள்தொகை பதிவேட்டின்கீழ், தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை
இந்திய கடவுச்சீட்டு
புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட பணி அடையாள அட்டைகள்
நாடாளுமன்ற, சட்டமன்ற, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அலுவலக அடையாள அட்டை 
இவற்றை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புகைப்பட வாக்காளர் சீட்டிற்குப் பதிலாக வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News