உனக்கு ஜூஸ் பாக்கெட்... எனக்கு கண்ணாடி.. டீலா நோ டீலா..
உனக்கு ஜூஸ் பாக்கெட்... எனக்கு கண்ணாடி.. டீலா நோ டீலா..
வீட்டுக்குள் புகுந்த குரங்கு ஒன்று கண்ணாடியை திருடிக் கொண்டு ஒய்யாரத்தில் ஏறி அமர்ந்து கொண்டது. வீட்டு உரிமையாளர் கேட்ட போதும் கண்ணாடியை திருப்பிக் கொடுக்காமல் குரங்கு விடாப்பிடியாக இருந்துள்ளது.
இதனையடுத்து, தனது வீட்டில் இருந்த ஜூஸை எடுத்து வந்து குரங்கிடம் காட்டவே, அதனை உடனடியாக வெடுக்கென குரங்கு பறிக்க முயன்றது. அப்போது, அந்த நபர் ஜூஸை கொடுக்காமல் முதலில் கண்ணாடியை கொடுக்குமாறு சைகையில் காட்டவே, அதற்கு மறுத்துவிட்ட குரங்கு மீண்டும் கையில் இருந்த ஜூஸை பறித்துக் கொண்டது. பின்னர், கண்ணாடியை மேலிலிருந்து கீழே தள்ளிவிட்டது.
காவல்துறை அதிகாரியான ரூபின் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோ, எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்ற விபரங்கள் வெளியாகவில்லை.
Smart 🐒🐒🐒
— Rupin Sharma IPS (@rupin1992) October 28, 2021
Ek haath do,
Ek haath lo 😂😂😂😂🤣 pic.twitter.com/JHNnYUkDEw