சினிமா வாய்ப்புகள் கிடைக்கலை... You Tube சேனல் தொடங்கிய ஹன்சிகா!!
சினிமா வாய்ப்புகள் கிடைக்கலை... You Tube சேனல் தொடங்கிய ஹன்சிகா!!
ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள். இந்த ஊரடங்கு உத்தரவு பல நடிகைகளுக்கு ஞானோதயத்தைக் கொடுத்திருக்கிறது. தினம் தினம் நிருபர்களுக்கு பேட்டிக் கொடுத்து, கேமிரா வெளிச்சத்தில் இருந்து வந்த நடிகைகள் தற்போது வீட்டில் இருப்பதால் செய்வதறியாது திகைத்து வருகிறார்கள். தற்போது வளர்ந்துள்ள தொழில்நுட்பத்தில் முக்கியமானதாக யூ டியூப் ஒரு அங்கமாக மாறிவிட்டது. இதை பயன்படுத்தாதவர்களே இருக்க மாட்டார்கள் . இதனில் கிடைக்காத வீடியோக்களே இருக்காது.
அதே போல் ஆண்ட்ராய்டு போன்களிலும் பயன்படுத்தி கொள்ளலாம். பல பிரபலங்களும் இதில் கணக்கு தொடங்கி வீடியோக்களை அப் லோடு செய்து வருகின்றனர். இந்நிலையில், தொடர்ந்து படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்காததால், புகழ் வெளிச்சத்தை இழக்க ஆரம்பித்தார் நடிகை ஹன்சிகா. தமிழ் படங்களில் நடித்திருந்தாலும், இன்னமும் சரிவர தமிழ் பேசத் தெரியாததால், நிருபர்களுக்கும் ஆரம்பம் முதலே பேட்டிக் கொடுப்பதற்கு பந்தா செய்து வந்தவரை இப்போது சினிமா நிருபர்களும் கண்டுக் கொள்வதில்லை. இந்நிலையில், படங்களிலும் வாய்ப்புகள் இல்லாததால், ஹன்சிகா தனக்கென யூடியூப் சேனலை துவக்கியுள்ளார்.
நடிகைகளில் பெரும்பாலானோர் இதுபோல் யூடியூப் சேனல் துவக்கியதில்லை. டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நடிகர், நடிகைகள் பிசியாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் சில நட்சத்திரங்கள் யூடியூப் சேனல் கூட துவக்கி விடுகிறார்கள்.
தமிழ் பட இயக்குனர்கள் பலரும் இது போல் சேனல் துவக்கி இருக்கிறார்கள். இது பற்றி ஹன்சிகா கூறும் போது, மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். அதே சமயம் படபடப்பாகவும் இருக்கிறது. முதல்முறையாக என்னுடைய யூடியூப் சேனலை வெளியிடுகிறேன்.
என்னுடன் சேர்ந்து என்னுடைய வாழ்க்கைக்கு உள்ளே சென்று, என் உண்மையான பக்கத்தை அறிந்துகொள்ள தயாராக இருங்கள் என கூறியுள்ளார். தற்போது மகா படத்தில் ஹன்சிகா நடித்து வருகிறார். யூடியூப் சேனல் துவக்கி அவர் அதில் என்ன சொல்லப் போகிறார் என சில நடிகைகளும் ஆர்வமாக கவனித்து வருகின்றனர்.
Newstm.in