இளம் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் திரையுலகம்!

திரையுலகில் நடிகைகள் அதிக மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துக் கொள்ளும் போக்கு சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. வங்க மாநிலத்தில் பர்த்வான் பகுதியைச் சேர்ந்தவர் நடிகை சுபர்னா ஜாஷ். மேல் படிப்பிற்காக கொல்கத்தாவிற்கு வந்திருந்த சுபர்னா ஜாஷுற்கு சினிமாவின் மேல் தீராத காதல்...

Update: 2020-02-11 23:49 GMT

திரையுலகில் நடிகைகள் அதிக மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துக் கொள்ளும் போக்கு சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. வங்க மாநிலத்தில் பர்த்வான் பகுதியைச் சேர்ந்தவர் நடிகை சுபர்னா ஜாஷ். மேல் படிப்பிற்காக கொல்கத்தாவிற்கு வந்திருந்த சுபர்னா ஜாஷுற்கு சினிமாவின் மேல் தீராத காதல் இருந்தது. பட வாய்ப்புகளைத் தேடி அலைந்த சுபர்னா ஜாஷ், இதற்காக தனியே போட்டோஷூட் செய்திருந்தார். பின்னர், சுபர்னா ஜாஷுற்கு சில திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது. சமீபத்தில் வெளியான  வங்க மொழிப் படமான ‘மயூர்பங்கி’ திரைப்படத்திலும் சுபர்னா ஜாஷ் நடித்திருந்தார்.

ஆனால், மயூர்பங்கி படத்திற்குப் பின்னர், சுபர்னா ஜாஷுற்கு எதிர்பார்த்தது போல் திரைப்பட வாய்ப்புகள் அமையவில்லை. இதனால், அதிகளவில் மன அழுத்தத்தில் இருந்து வந்த சுபர்னா ஜாஷ்,  தனது அறையில் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்டதை அறிந்த அவரின் பெற்றோர், அதிர்ச்சியில் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். ஆனால், நடிகை சுபர்னா ஜாஷ்  ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்.

இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது வங்கமொழி திரைப்படத்துறையினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

newstm.in

Tags:    

Similar News