சர்வதேச மோட்டார் சைக்கிள் பந்தயத்திற்கான இத்தாலி கிராண்ட் பிரிவு தகுதி சுற்று போட்டி நடைபெற்றது. இதில் பல வீரர்கள் கலந்துகொண்ட நிலையில் அவர்களுடன் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜாசன் துபாஸ்குயர்  என்பவரும் பங்கேற்றார்.

போட்டிகள் தொடங்கியதும் பைக்குகள் மின்னல் வேகத்தில் பறக்கத் தொடங்கின. ஆனால் அப்போது அவர் சென்ற பைக் நிலைத்தடுமாறி திடீரென விபத்தில் சிக்கினார். அதாவது ஜாசன் பைக் மீது மற்றொரு பைக் பயங்கரமாக மோதியதில் பைக் நிலைத்தடுமாறி தூக்கி வீசப்பட்டு பல அடி தூரம் பல்டி அடித்து விழுந்தார்.

இதில் பலத்த காயமடைந்த 19 வயதான ஜாசன் துபாஸ்குயர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனனும் அங்கு பரிசோதனையில் அவரது மூளையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் மரணம் அடைந்தார். அவரது இறப்பு சைக்கிள் பந்தய வீரர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

19 வயதே ஆன இவர் பல்வேறு தொடர்களில் பைக் ரேசில் சீறிப்பாய்ந்து சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். இந்த நிலையில் ஜாசன் துபாஸ்குயர் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 Full View
newstm.in


 

Tags: