தவறான பேச்சால் இளம்பெண் சுட்டுக்கொலை.. நண்பன் உயிருக்கு போராட்டம்.. இளைஞர் வெறிச்செயல் !!
தவறான பேச்சால் இளம்பெண் சுட்டுக்கொலை.. நண்பன் உயிருக்கு போராட்டம்.. இளைஞர் வெறிச்செயல் !!
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் 22 வயதான இளம்பெண் அவரது வீட்டிலேயே சுட்டுக் கொலை செய்யப்பட்டார். பின்னர் வீட்டில் அப்பெண்ணின் சடலத்தை கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு புகார் அளித்தனர்.
விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. எம்ஏ பட்டதாரியான 22 வயது கிர்த்திகா திரிவேதி என்ற இளம்பெண் தன்னுடன் பயின்ற ஹுக்மேந்திர சிங் குர்ஜார், மந்தன் சிங் செங்கர் ஆகியோருடன் நட்புடன் பழகி வந்துள்ளார். இதில் மந்தன் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் மற்ற இருவரும் உள்ளுரை சேர்ந்தவர்.
இந்த நிலையில், கிர்த்திகாவுடனான தனது உறவு குறித்து ஹுக்மேந்திரா வதந்திகளை பரப்புவதாக மந்தன் சந்தேகம் அடைந்துள்ளார். பின்னர் இது தொடர்பாக நண்பர்கள் மூவருக்கும் இடையில் சண்டை இருந்து வந்தது. விவகாரம் முற்றியதால் மந்தன் சிங் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் அவர் திடீரென கல்லூரியில் ஹுக்மேந்திரா இருக்கும் போது துப்பாக்கியுடன் நுழைந்துள்ளார். பின்னர் அவரது வகுப்பறையில் நுழைந்து தலையின் பின்புறத்தில் துப்பாக்கியால் சுட்டுள்ளார். பின்னர் கரும்பலகையில் "மந்தன் முடித்து விட்டான்" என்று எழுதி விட்டு அங்கிருந்து சென்றார்.
எனினும் ஆத்திரம் தீராத மந்தன் நேராக கிருத்திகா வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் தனது அறையில் இருக்கும் போது அங்கு துப்பாக்கியுடன் நுழைந்த மந்தன் அப்பெண்ணை பல முறை துப்பாக்கியால் சுட்டார். இதனைப் பார்த்த கிருத்திகாவின் குடும்பத்தினரும் மந்தனை பிடித்து ஒரு கம்பத்தில் கட்டி தர்மஅடி கொடுத்தனர். மேலும், போலீஸுக்கு தெரிவித்தனர்.
இதனிடையே, படுகாயம் அடைந்த கிர்த்திகா மருத்துவமனையில் உயிரிழந்தார். தலையில் காயமடைந்த ஹுக்மேந்திரா டெல்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே கைது செய்யப்பட்ட மந்தனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in