இளம்பெண்ணை எரித்துக் கொன்று இளைஞரும் தற்கொலை!!
இளம்பெண்ணை எரித்துக் கொன்று இளைஞரும் தற்கொலை!!
காதலிக்க மறுத்தால் இளம்பெண்ணை எரித்துவிட்டு இளைஞரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்திற்குட்பட்ட திக்கோடி பகுதியில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் 8 நாட்களுக்கு முன்பு கிருஷ்ணபிரியா என்ற பெண் புதிதாக வேலைக்குச் சேர்ந்தார்.
இவரை அதே பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் என்ற இளைஞர் ஒருதலையாக காதலித்து வந்தார். பின்னர் கிருஷ்ணபிரியாவிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி நந்தகுமார் கூறியுள்ளார். அதற்கு கிருஷ்ணபிரியா மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த நந்தகுமார் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வந்து, திடீரென கிருஷ்ணப் பிரியா மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீவைத்துள்ளார். இதைப்பார்த்து அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
திடீரென நந்தகுமாரும் தனக்குதானே தீவைத்துக் கொண்டார். பின்னர் இருவரையும் மீட்ட அப்பகுதி மக்கள் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் கோழிக்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in