திருமண ஆசைகாட்டி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்.. குழந்தை பிறந்த பிறகு போக்சோவில் கைது !!
திருமண ஆசைகாட்டி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்.. குழந்தை பிறந்த பிறகு போக்சோவில் கைது !!
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் ராணிப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில், 18 வயது மாணவிக்கும் அவரது சொந்த ஊரான செய்யாறு பகுதியைச் சேர்ந்த சுதாகர்(36) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. சுதாகருக்கு ஏற்கனவே திருமணமாகி ராதா என்ற மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
சுதாகரும், கல்லூரி மாணவியும் கடந்த 5 ஆண்டுகளாக நட்பாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் சுதாகர், கல்லூரி மாணவி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து அங்கு சென்றுள்ளார். பின்னர், தான் வாங்கி சென்ற குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து அதனை மாணவிக்கு கொடுத்துள்ளார். அதை குடித்த சிறிது நேரத்தில் மாணவி மயங்கி விழுந்துள்ளார்.
அப்போது, மாணவியை சுதாகர் பாலியல் பலாத்காரம் செய்தாராம். மயக்கம் தெளிந்து எழுந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை அறிந்து கதறி அழுதுள்ளார். மேலும், இதுகுறித்து சுதாகரிடம் கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது திருமணம் செய்து கொள்கிறேன் என கூறி மாணவியை சமாதானம் செய்துள்ளார்.
இதனை பயன்படுத்தி, திருமண ஆசை காட்டி சுதாகர் அடிக்கடி மாணவியிடம் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாக மாணவி கர்ப்பமானார். கடந்த 24ஆம் தேதி அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. திருமணமாகாமல் குழைந்தை பிறந்தது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் பெற்றோர் தரப்பில் இதுகுறித்து கல்லூரி மாணவி செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் விசாரணை நடத்தி மாணவியை கர்ப்பமாக்கிய சுதாகரை போக்சோ சட்டத்தில் கீழ் போலீசார் கைது செய்தார்.
newstm.in