உன் தலை இருக்காது! நடிகர் தனுஷூக்கு கொலை மிரட்டல்!!
‘கர்ணன்’ திரைப்படத்தின் கதை 1991ம் ஆண்டு நடைபெற்ற கொடியங்குளம் மணியாச்சி சாதி கலவரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருவதாகவும், திருநெல்வேலி மற்றும் தூத்துகுடி மாவட்டங்களில் நடைப்பெற்று வரும் படப்பிடிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தில் துவங்கி ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற படங்கள் இருவருக்குமே சினிமா ரசிகர்களிடையே நல்ல பெயர் பெற்று தந்தது. இந்நிலையில், நடிகர் தனுஷ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவிற்கு இத்தனை காலங்களாக படத்தோட தலைப்பை மாற்று, பாடலை நீக்கு, காட்சியை படத்திலிருந்து தூக்கிவிடு என்று சமூக நல அமைப்புகளும், அரசியல் கட்சித் தலைவர்களும் போர்க்கொடி உயர்த்தி வந்தார்கள். ஆனால், கர்ணன் திரைப்படத்தின் படப்பிடிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று திரையுலகில் இருந்து திடீர் அரசியல்வாதியாக உருவெடுத்த நடிகர் கருணாஸ் போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார். நடிகர் கருணாஸின் முக்குலத்தேவர் புலிப்படை அமைப்பு சார்ப்பில் இது குறித்து காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
‘கர்ணன்’ திரைப்படத்தின் கதை 1991ம் ஆண்டு நடைபெற்ற கொடியங்குளம் மணியாச்சி சாதி கலவரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருவதாகவும், திருநெல்வேலி மற்றும் தூத்துகுடி மாவட்டங்களில் நடைப்பெற்று வரும் படப்பிடிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
இந்நிலையில், கர்ணன் படத்தின் படப்பிடிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், எங்கள் சமூகத்தை அவதூறாக சித்தரிக்கும் வகையில் படம் எடுத்தால் உன் தலை இருக்காது’ என்றும் வாலிபர் ஒருவர் வாட்ஸ் அப்பில் கொலை மிரட்டல் விடுத்து பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகி, சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
newstm.in