இவ்வளவு சீக்கிரம் போய்விட்டீர்களே! - கே.வி.ஆனந்த் மறைவிற்கு நடிகர் தனுஷ் ட்வீட்

இவ்வளவு சீக்கிரம் போய்விட்டீர்களே! - கே.வி.ஆனந்த் மறைவிற்கு நடிகர் தனுஷ் ட்வீட்

Update: 2021-04-30 11:43 GMT

இந்தியாவின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான கே.வி.ஆனந்த் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார். 54 வயதான அவரது மறைவு செய்தியை கேட்டு திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

இன்று அதிகாலை நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து அவரே தனது காரில் சென்று மருத்துவமனைக்கு சென்றார். அதனைத் தொடர்ந்து சிகிச்சை பலன் அளிக்காத காரணத்தால் இன்று காலை 3 மணிக்கு மாரடைப்பால் காலமானார்.


கே.வி.ஆனந்த் மறைவிற்கு நடிகர் தனுஷ் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பக்கத்தில் "நல்ல குணங்களை கொண்ட ஒரு நேர்மையான மனிதர் காலமானார். அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த மிகவும் இனிமையான மனிதர் கே.வி.ஆனந்த் சார். இவ்வளவு சீக்கிரம் போய்விட்டீர்களே!. அவரது குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கல். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்” என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News