ஹாஸ்டலில் கஞ்சா வளர்த்த இளைஞர் கைது!!
ஹாஸ்டலில் கஞ்சா வளர்த்த இளைஞர் கைது!!
கஞ்சா கிடைக்காத காரணத்தால் கஞ்சா செடி வளர்த்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பூர் முத்தனம்பாளையம் பகுதியில் கஞ்சா செடி வளர்ந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ஒரு பனியன் கம்பெனி ஹாஸ்டலில் பூச்செடிளுக்கு நடுவில் கஞ்சா செடி வளர்ந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த விடுதியில் இருந்த 8 பேரிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது ஹாஸ்டலில் வசிக்காத வெளி நபர் ஒருவர் சம்பந்தமே இல்லாமல் வந்து பூச்செடிகளுக்கு தண்ணீர் விட்டார் என்ற விவரம் தெரிய வந்தது.
விசாரனையில் அந்த இளைஞர் தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் பார்த்தீபன் (25) என்பது தெரிய வந்தது. இவர் திருப்பூர், வெள்ளியங்காடு பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
வெளியில் கஞ்சா பொட்டலங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், உடனே கஞ்சா செடி வளர்க்க முடிவு செய்துள்ளார். செவந்தாம்பாளையம் பகுதியில் உள்ள பனியன் கம்பெனிக்கு எதிரே உள்ள ஹாஸ்டலில் கஞ்சா செடியை தண்ணீர் விட்டு வளர்த்து வந்திருக்கிறார்.
அங்கு உள்ள பூச்செடிகளுக்கு மத்தியில், பூச்செடிகள் வளர்ப்பது போல தொட்டியில், கஞ்சா விதைத்து, மாதக்கணக்கில் தண்ணீர் விட்டு கஞ்சா செடியை வளர்த்து இருக்கிறார்.
இதை கண்டுபிடித்த போலீஸார் 2 அடி உயரத்தில் இருந்த 4 செடிகள், 1 அடி உயரத்தில் 3 செடிகள் என 7 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்து பார்த்திபனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
newstm.in