யூடியூப் பார்த்து வெடிமருந்து தயாரித்த இளைஞர்கள்.. வனப்பகுதியில் சுற்றிவளைப்பு !!

யூடியூப் பார்த்து வெடிமருந்து தயாரித்த இளைஞர்கள்.. வனப்பகுதியில் சுற்றிவளைப்பு !!

Update: 2022-01-28 13:10 GMT

யூடியூப் வீடியோக்களை பார்த்து வெடிமருந்துகளை தயாரித்து காட்டுப்பன்றியை வேட்டையாடிய ஆண்டிபட்டி இளைஞர்கள் இருவர் சிக்கியுள்ளனர். 

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வனச்சரக எல்கைக்கு உட்பட்ட காப்புக்காடு, சந்த மலைப் பகுதியில் சிலர் அவ்வப்போது வனவிலங்குகளை வேட்டையாடி வருவதாக புகார் கூறப்படுகிறது. இதனால் வனத்துறையினர் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், வனக்காவலர்கள் வழக்கம்போல ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது இளைஞர்கள் இருவர் ஒரு சாக்குமூட்டையை தூக்கிக்கொண்டு சென்றது தெரியவந்தது. அவர்கள் வனக்காவலர்களை பார்த்ததும் இருவரும் தப்பி ஓடி உள்ளனர். இதனையடுத்து வனக் காவலர்கள் அவர்களை மடக்கி பிடித்து, சாக்கு பையை கைப்பற்றி பார்த்ததில், வேட்டையாடிய இரண்டு காட்டுப்பன்றி இருந்தது தெரியவந்தது. மேலும் அவர்கள் வெடிமருந்து வைத்திருந்ததையும் கண்டுபிடித்தனர். 

இதனைத்தொடர்ந்து இருவரையும் வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை செய்தனர். அப்போது ஆண்டிபட்டி பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (26), வேல்சாமி (29) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் யூடியூப் பார்த்து வெடி மருந்து தயார் செய்து காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடியதாக ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த இருவரும் தொடர்ந்து இதே போன்று வனவிலங்கு வேட்டையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 


  
newstm.in

Similar News