அட கொடுமையே.. பெண் காவலருக்கு பாலியல் மிரட்டல்.. சக காவலர் கைது !
அட கொடுமையே.. பெண் காவலருக்கு பாலியல் மிரட்டல்.. சக காவலர் கைது !
பெண் காவலரின் ஆபாச புகைபடங்களை சமூக வலைதளத்தில் பதிவிடுவதாக மிரட்டிய ஆண் காவலரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரித்து வருபவர் ஏழனை பாண்டி. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு கோவையில் பணிபுரியும் போது, திருமணமான பெண் காவலர் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்கள் தனிமையில் சந்தித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. எனினும் சிறிது நாட்களில் காவலருடன் இருந்த தொடர்பை பெண் காவலர் துண்டித்து கொண்டார்.
இந்த நிலையில் காவலர் ஏழனை பாண்டி தனது சொந்த ஊரான நாங்குநேரி காவல் நிலையத்திற்கு பணிக்கு சென்று விட்டார். எனினும் காவலர் ஏழனைபாண்டி மீண்டும் பெண் காவலருடன் தொடர்பை ஏற்படுத்த முயன்றபோதும், பெண் காவலர் அதனை தவிர்த்து வந்துள்ளார் என கூறப்படுகின்றது.
இதனால் ஆத்திரமடைந்த அவர், பெண் காவலரை தொடர்பு கொண்டு மிரட்டத் தொடங்கியுள்ளார். மேலும், தனிமையில் இருந்த புகைபடங்களை சமூக வலைதளத்தில் பதிவிட போவதாகவும் ஏழனை பாண்டி பெண் காவலரை மிரட்டியுள்ளார். இதோடுமட்டுமல்லாமல் பெண் காவலரின் கணவருக்கும் புகைபடங்களை அனுப்பி காவலர் ஏழனைபாண்டி மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த பெண் காவலர், கோவை மாவட்ட சைபர் கிரைமில் இது குறித்து புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் பெண்கள் வன்கொடுமை சட்டம் மற்றும் பாலியல் ரீதியாக துன்புறுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் சைபர் கிரைம் போலீசார் நாங்குநேரியில் இருந்த காவலர் ஏழனைபாண்டியை கைது செய்து கோவை அழைத்து வந்து நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.
பெண் காவலருக்கு சக காவலர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in