அடேங்கப்பா! உச்சிக்கு சென்ற தங்கம் விலை !!
அடேங்கப்பா! உச்சிக்கு சென்ற தங்கம் விலை !!
ஏப்ரல் மாதம் தொடக்கத்திலிருந்தே ஏற தொடங்கிய தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களாக சற்று இறங்கியது மக்களிடையே நிம்மதி அடைய வைத்தது. ஆனால் இன்று ஒரே நாளில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது தங்கத்தின் விலை.இன்றைய விலை உயர்வின் மூலம் ஒரு சவரன் ரூ.36,000க்கு மேல் சென்றது வாடிக்கையாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 472 ரூபாய் உயர்ந்து ரூ.36,048-க்கு விற்பனையான நிலையில் மாலையில் மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை. மாலை நிலவரப்படி சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ரூ.36,088-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, ரூ.4,511-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று காலை 73,900 ரூபாயாக இருந்த நிலையில், இன்று மாலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 200 ரூபாய் உயர்ந்து ரூ.74,100-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
newstm.in